மன்னார்குடி
பிரபலங்கள்
ஊத்துக்காடு வெங்கட சுப்பையர்
(16 அக்டோபர் 1700 - 1765) 18 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கருநாடக இசைக் கலைஞராவார்.
அலைபாயுதே.. கண்ணா...
இவர் இயற்றிய பாடல்களில் ஒன்று
பக்கிரியா பிள்ளை
பக்கிரியா பிள்ளை 1866 ஆம் ஆண்டு, மன்னார்குடியில் பிறந்தார்.
பக்கிரியா பிள்ளை (1866 - 1937) தமிழகத்தைச் சேர்ந்த இசைக் கலைஞர் ஆவார். இவர் கொன்னக்கோல் இசைக் கலையில் சிறந்து விளங்கினார். தவில், மிருதங்கம் எனும் தோல் கருவிகளை வாசிப்பதில் வல்லவர்; நட்டுவாங்கம், வாய்ப்பாட்டுக் கலைகளிலும் தனது திறமைகளை வெளிக்காட்டியவர்
மன்னார்குடி சாம்பசிவ பாகவதர்
மன்னார்குடி சாம்பசிவ
பாகவதர் 1912 ஆம் ஆண்டு, மன்னார்குடியில் பிறந்தார். இவர் ஒரு கருநாடக இசைக்
கலைஞராவார்.
மன்னார்குடி தி. ஜானகிராமன்
தி. ஜானகிராமன் 1921 ஆம் ஆண்டு, மன்னார்குடியை அடுத்து தேவங்குடியில் பிறந்தவர். ஒரு புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளர்.தி.ஜா என்றும் அழைக்கப்படுபவர். சக்தி வைத்தியம் என்ற சிறுகதைத் தொகுப்புக்காக தமிழுக்கான சாகித்ய அகாதமி பரிசு பெற்றவர். தமிழின் மிகப்புகழ்பெற்ற நாவல்களான தி.ஜா இசையை எழுத்தாக்கிய அபூர்வ எழுத்தாளர். பத்து வருடங்கள் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றிவர், பின்பு அகில இந்திய வானொலியில் பணியாற்றி ஓய்வு பெற்றார்.
மனோரமா ஆச்சி (நடிகை)
மனோரமா ஆச்சி 26.5.1937 ஆம் ஆண்டு ராஜமன்னார்குடியில் வசதியான குடும்பத்தில் பிறந்தவர்.இவரது இயற்பெயர் கோபிசாந்தா. இவரது பெற்றோர் காசி 'கிளாக்' உடையார் மற்றும் ராமாமிர்தம். மனோரமா தமிழ்நாடு மாநிலத்தில் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ராஜமன்னார்குடியில் வசதியான குடும்பத்தில் பிறந்தவர். தந்தை ஒரு சாலை ஒப்பந்தக்காரராகப் பணியாற்றியவர். தந்தை காசி கிளாக்குடையார் மனோரமாவின் தாயின் தங்கையை இரண்டாம் தாரமாகத் திருமணம் புரிந்தார். இதனை அடுத்து கணவனால் புறக்கணிக்கப்பட்ட இராமாமிருதம் மனோரமாவுடன் வறுமையின் காரணமாக காரைக்குடி அருகே உள்ள பள்ளத்தூர் என்ற ஊருக்கு குடிபெயர்ந்தார். 6 ஆம் வகுப்பு வரை படித்துள்ளார். அங்கு அவர்கள் பலகாரம் சுட்டு விற்பனை செய்து வாழ்க்கையைத் தொடங்கினார்கள். தனது 12ஆவது அகவையில் நடிப்புத் தொழிலில் இறங்கினார். "பள்ளத்தூர் பாப்பா" என அழைக்கப்பட்டார் நாடக இயக்குனர் திருவேங்கடம், ஆர்மோனியக் கலைஞர் தியாகராஜன் ஆகியோர் இவருக்கு "மனோரமா" எனப் பெயர் சூட்டினர்.
ஆரம்பத்தில் "வைரம் நாடக சபா" நாடகங்களில் சிறு வேடங்களில் நடித்து வந்தார். அக்காலத்தில் புதுக்கோட்டையில் எஸ். எஸ். ராஜேந்திரன் நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்த போது அவருக்கு மனோரமா பி. ஏ. குமார் என்பவரால் அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். மனோரமாவின் திறமையை அறிந்துகொண்ட இராசேந்திரன் தனது "எஸ்.எஸ்.ஆர். நாடக மன்றத்தில்" சேர்த்துக் கொண்டார். இந்நாடக நிறுவனத்தின் மணிமகுடம், தென்பாண்டிவீரன், புதுவெள்ளம் உட்பட நூற்றுக்கணக்கான நாடகங்களில் நடித்தார். மனோரமா முதன் முதலாக மஸ்தான் என்பவர் இயக்கிய ஒரு சிங்கள மொழித் திரைப்படத்தில் கதாநாயகிக்குத் தோழியாக நடித்திருந்தார். பின்னர் ராஜேந்திரன், தேவிகா நடித்த ஒரு திரைப்படத்தில் இவர் நடித்தார். ஆனால் இத்திரைப்படம் வெளிவராமல் பாதியிலேயே நின்று விட்டது.