மன்னார்குடியோட பிரபலமான கடைகள்
மன்னார்குடி முந்திரி அல்வா
இந்தப் பெயரைக் கேட்டாலே,
திருநெல்வேலி
நினைவு வருவது தவிர்க்க முடியாதது.
ஆனால், உலகம் முழுக்க திருநெல்வேலி அல்வா கொடி பறந்தாலும் யாருக்கும் தெரியாமல் அல்வாவோடு வாழ்க்கை நடத்தும் இன்னோர் ஊர் மன்னார்குடி!
திக்குத் திசையெட்டும் அல்வா விற்றாலும் ஒவ்வொரு அல்வாவும் ஒவ்வொரு பக்குவம்;
ஒவ்வொரு ருசி.
இதில், மன்னார்குடி
முந்திரி அல்வாவுக்கு
அப்படியென்ன விசேஷம் என்றால், முந்திரி அல்வா ஏன்றால், அல்வா பாதி முந்திரி பாதி. ஒரு கடிக்கு முந்திரியும் மறு கடிக்கு அல்வாவும் பல்லில் சிக்கும், இரண்டும் சேர்ந்து ஒன்றாய்க் கரைந்து உள்ளே போகும் ருசியே அலாதிதான்!
அந்தக் காலம் தொட்டு மன்னார்குடியில் மட்டும் இந்த ருசி கிடைப்பதற்கு பாமணியாற்றுத்
தண்ணீரும் ஒரு காரணம்
முந்திரி அல்வா
ருசியைப் பிடித்தது எப்படி? டெல்லி
ஸ்வீட்ஸ் கடை உரிமையாளர் விழுப்புரம் யுவராஜ் சொல்கிறார்: "இரண்டு பங்கு கோதுமை, மூன்று பங்கு ஜீனி, ஒரு
பங்கு முந்திரி, அரைப் பங்கு எண்ணெய், அரைப் பங்கு நெய், இன்னும் சில
இத்யாதி. இவை இருந்தால் மன்னார்குடி அல்வாவைச் செய்துவிடலாம். ஆனால், கோதுமைப் பால் எடுப்பதில் தொடங்கி முந்திரியைப்
போட்டு கிளறுவதுவரை அது அதற்கான பக்குவத்தைக் கையாள வேண்டும். அதில்தான் இருக்கிறது வித்தை. சரியாக 6 மணி நேரம் கோதுமையை ஊறவைக்க வேண்டும்.
ஒரு பங்கு கோதுமையில் அரைப் பங்கு பாலுக்கு மேல் எடுக்கக் கூடாது. அல்வாவில் எண்ணெய் அதிகம் இருந்தால் சுவை கொடுக்காது; முழுக்க முழுக்க நெய்யில் செய்தால் பதம் கொடுக்காது. இந்த இரண்டையும் சரிசமமாய்க் கலக்க வேண்டும். மன்னார்குடி அல்வாவுக்கு நாக்குப் பதம் கிடையாது; கைப்பதம்தான்.
பாகும் பாலும் சேர்ந்து கூடும்போது அல்வாவை எடுத்து உள்ளங்கையில் போட்டால் உருளைபோல் உருள வேண்டும். உருண்டால் அது மன்னார்குடி பாணி அல்வா'' என்கிறார் யுவராஜ்.
டெல்லி ஸ்வீட்ஸ் மற்றுமொரு தயாரிப்பு பேரிச்சை அல்வா. முந்திரி அல்வாவையே முழுங்கிவிடுவதுபோல்
இருக்கும்.
பேரிச்சை அல்வா, மணி
காரபூந்தி
நன்றி சமஸ்
தமிழ்நாட்டிலேயே
அதிகமாக டீ போடும்
ஒரு நாளில் 5000 டீ
போடும் மன்னார்குடி நேதாஜி
நேதாஜி டீ ஸ்டால்
ஓரு டீ போடும் தொழிலாளி ஒரு நாளில் எத்தனை டீ தயாரிக்கமுடியும்? ஒருங்கிணைந்த
திருவாருர் மாவட்டம் மன்னார்குடியைச்சேர்ந்த டீ போடும் தொழிலாளி ஒரு நாளில் 5000 டீ போடுவதாக தினமணியில்செய்தி வெளியாகி
உள்ளது.
தமிழ்நாட்டிலேயே
அதிகமாக டீ போடும் அந்த தொழிலாளியின் பெயர் நேதாஜி. ஒரு நாளைக்கு 5000 டீ
போடுவது பெரிய
செய்தியில்லை அவருக்கு. அந்த 5000 டீயையும் ஒரே ருசியுடன் தருவதுதான் செய்தி.
அவருடைய டீக்கடை
அதிகாலை நான்கு மணிக்கு திறக்கப்படுகிறது. நண்பகலில் சற்று ஓய்வு. பிறகு சதா
சர்வ நேரமும்
டீ...டீ...டீ..தான்.
மற்ற கடைகளைவிட
இவருடைய கடையில் டீயின் விலை 50 பைசா கூடுதல். கூட்டத்துக்கு குறைவில்லை.
"கறவைப்பால் மட்டும் வாங்குகிறோம். இரண்டு அடுப்பு இருக்கும். ஒன்று தண்ணீர்
கலக்காத பால் கொதிக்க.
இன்னொன்றில்
ஒன்றுக்கு மூன்று என்கிற கணக்கில் தண்ணீர் கலந்த பால் கொதித்துக்கொண்டிருக்கும்.
டிக்காக்க்ஷனை தண்ணீரில் போடமாட்டோம். இரண்டாவது பாலில் போடுவோம்.
டிக்காக்க்ஷன் தயாரானதும் பழுக்கக்காய்ச்சிய முதல் பாலை சேர்த்தால்
நேதாஜி பிராண்ட் டீ தயார்" என்கிறார்.
டீத்தூள் அதிகம்
வேகக்கூடாதாம். பாலை நன்கு கொதிப்பேற்ற வேண்டுமாம். நல்ல டீ போட விரும்புவோருக்கு
நேதாஜி தரும் டெக்னிகல் அட்வைஸ்.
நீங்கள் அவருடன்
பேசிக்கொண்டிருந்தால் வரிசையில் கடைசி இடம்தான் உங்களுக்கு.
பேசுவதை நிறுத்திவிட்டு வரிசையில் போய் நின்று கொள்ளுங்கள்.
நன்றி:தினமணி
குஞ்சான் செட்டியார் மிட்டாய் கடை பக்கோடா
நூற்றாண்டுக்கும் மேலாக இந்த வட்டாரத்தையே கட்டிப்போட்டிருக்கும்
ஒரு ஐட்டம் குஞ்சான் செட்டியார் மிட்டாய் கடை பக்கோடா. சும்மாவா, கர்நாடக இசை மேதை
கிட்டப்பாவையே சொக்க வைத்த ருசியல்லவா
அது! மன்னார்குடி கடை வீதியில் கொஞ்சமும் பழைமை மாறாமல்
இன்றும் இருக்கிறது குஞ்சான் செட்டியார் மிட்டாய் கடை. தவிர, சுற்று வட்டார
கோயில் திருவிழாக்களில் எந்த இடத்தில் பலகாரங்கள் மலைபோல குவித்து வைக்கப்பட்டிருக்கின்றனவோ
அந்தக் கடைகளெல்லாமும் குஞ்சான் கடைதான்.
கோயில்களுக்கு முன் சொந்தமாக இடம் வாங்கி, அந்த இடத்தில்
திருவிழாக் கடை போடுமளவுக்குக் கடை பிரபலம். ஆனாலும், மன்னார்குடியில் குஞ்சான் செட்டியார் தொடங்கிய அதே சிறிய பெட்டிக் கடையில் தொடர்கிறது கடை.
வெங்காயத்தை நல்லெண்ணெய்யில் வதக்கும்போது
அப்படியே விழுந்து கடிக்க வேண்டும்போல் முதலில் எழுமே ஒரு மணம், அது குஞ்சான் கடை
பக்கோடாவில் எப்போதும் குடி கொண்டிருக்கிறது.
முதல் கடிக்கு மொறுமொறுப்பு; அடுத்த கடிக்குப் பதம்;
மூன்றாம் கடிக்கு கரையும்.
அப்படி ஒரு பதம் இந்தப் பக்கோடாவில் இருக்கிறது. பக்கோடா
மட்டுமல்ல; சுட்டது முதல் வாய்க்குள் போகும் வரை ஒரே ருசியில் இருக்கும் இந்தக் கடையின் மெதுவ
டையும் பிரபலம்தான்.
தலைமுறைகளைக் கடந்த பக் கோடா, வடை பற்றி இந்தத் தலைமு றையில் கடையை நடத்திக்கொண்டிருக்
கும் எஸ். லட்சுமிகாந்தன் கூறுகிறார்: “”எங்களுக்குப் பூர்வீகம் மகாதேவப் பட்டணம். குஞ்சான் செட்டியார் ஆரம் பித்த இந்தக் கடையை அடுத்தத் தலை
முறையில் அவருடைய மகன் துரை சாமி செட்டியார் பிரபலமாக்கினார்.
அவருடைய காலத்தில்தான் வடைக் கென தனி ருசி வந்தது. இது
ஐந்தாவது தலைமுறை. இன்றும் அந்த ருசி அப் படியே தொடர காரணம் அவர்கள் சொல்லிக் கொடுத்த
கைப்பக்குவத் தையும் தரத்தையும் மாற்றாதது தான்.
இன்றும் ஆட்டுக்கல்லில்தான் மாவு அரைக்கிறோம். விறகு அடுப்
பைத்தான் எரிக்கிறோம். சரியான வேக்காட்டுக்குத் தீ பக்குவம் முக்கி யம் தெரியுமா? அதேபோல், மாவு பதமும்
முக்கி யம். மாவு பிசையும்போது சொட்டு சொட்டாக நீர் விட்டு
பிசைந்தால்தான் மாவுக்கேற்ற பதம் கிடைக்கும். மற்றபடி, பொருளோடு தரம்தான்
பலகாரத்தில் ருசிக் கும். நாங்கள் எந்தப் பொருளிலும் மலிவானதைச் சேர்ப்பதில்லை. சோடா
உப்பு சேர்ப்பதில்லை.
பெரிய வெங்காயம் வந்தவுடனே எல்லோரும் அதுக்கு மாறிட்டாங்க.
ஆனால், என்ன விலை விற்றாலும் எங்கக் கடையில் இன்னமும் சின்ன வெங்காயம்தான்.
சின்ன வெங்காயத்தைப் பொடிப்பொடியாக நறுக்கிச் சேர்த்தால்
அதன் ருசியே தனி தான். எங்கக் கடை பக்கோடா, வடையின் தனி ருசிக்குக் காரணமே அதுதான்”
என் றார் லட்சுமிகாந்தன்.
கர்நாடக இசை மேதை எஸ்.ஜி. கிட்டப்பா தஞ்சை மாவட்டத்தில்
எங்கு நாடகம் போட்டாலும் அவருடைய ஆள்கள் குஞ்சான் கடைக்கு வந்து பக்கோடா கட்டிச் செல் வார்களாம். அந்தப்
பாரம்பரியம் இன்றும் தொடர்கிறது. ஆம், தேச எல்லைகளைக் கடந்து மன்னார்குடிக்காரர்கள் இருக்கும் இடங்களுக்கெல்லாம் பொட்டலமாகப் பய ணிக்கிறது
குஞ்சான் கடை பக்கோடா, தலைமுறைகளைத் தாண்டி.
டெல்லி ஸ்வீட்ஸ் முந்திரி அல்வா, பேரிச்சை அல்வா, மணி காரபூந்தி,
உடுப்பி ஹோட்டல் ரவா
தோசை
குஞ்சான் கடை பக்கோடா
அஞ்சாம் நம்பர் கடை லெஸ்ஸி,
அன்வர் கடை புரோட்டாவையும்
நேதாஜி கடை டீ...
என்று
மன்னார்குடி ஸ்பெஷல்னு ஒரு பெரிய பட்டியலே உண்டு..