மன்னார்குடி வரலாறு
ராஜேந்திர
சோழனின் மகன் இராஜாதிராஜ சோழனால் ராஜாதிராஜ சதுர்வேதிமங்கலம் என்ற
அக்ராஹரமாக உருவாக்கப்பட்ட ஊர். மன்னார்குடி சோழர்கள், பாண்டியர்கள், நாயக்கர்கள் மற்றும்
மராத்தியர்கள் ஆட்சி செய்த ஊர்.
மூன்றாம் ராஜ ராஜ சோழன்,
மூன்றாம் ராஜேந்திர சோழன், ஜடாவர்மன் சுந்தரபாண்டியன், குலசேகரபாண்டியன், அச்சுத தேவ ராயன், விஜயநகர
மன்னர்கள், மராத்திய மன்னர்கள், ஆகியோர் மன்னார்குடி மற்றும் ராஜகோபால சுவாமி கோவில்
வளர்ச்சிக்கும் பங்களித்துள்ளனர்.
மன்னார்குடியின் வரலாற்று
பெயர்கள்:
ராஜாதி ராஜ சதுர்வேதி மங்கலம்
குலோத்துங்க சோழ விண்ணகரம்
ராஜேந்திர சோழ விண்ணகரம்
மன்னார்கோயில்
சென்பகாரண்யா க்ஷேத்திரம்
சுத்தவல்லி வளநாடு
வண்டுவராபதி
வசுதேவபுரி
தக்ஷின துவாரகை
கோவில் நகரம்
மன்னார்குடியில் புகழ்மிக்க கோவில்கள் பல உள்ளன. அவற்றுள் மன்னார்குடி
ராஜகோபாலசாமி திருக்கோவில் உலகச் சிறப்பு வாய்ந்தது. இக்கோவில் ஆயிரம் ஆண்டுகள் பழமை
வாய்ந்தது.
சமணக்கோயில்
மன்னார்குடி
மல்லிநாதசுவாமி ஜினாலயம் சோழ நாட்டில் உள்ள சமணக்கோயில்களில்
ஒன்றாகும்.